Monday, October 17, 2016

மாய முரசு (ராணி காமிஸ்)

 மாயாவி காமிக்ஸ் கதைகள் வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்டாலும் ராணி காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காமிக்சுகளுக்கே தனியிடம் கிடைத்ததிருந்தது காராணம் தெளிவான படங்கள் எளிதில் விளங்கக்கூடிய கதைகள்.
அதில் ஒரு கதையை பகிர்கிறேன் அதற்கு முன்னதாக அந்தக் கதையை நான் முதன்முதலில் வாசிக்க நேர்ந்த விதத்தையும் சொல்லிவிடுகிறேன்..
1994 இல் ஒரு நாள் பழைய பத்திரிகைகள் விற்பனைக்கு வாங்கும் ஓர் பலசரக்கு கடைக்கு வீட்டிலுள்ள பழைய நாளிதழ்களை விற்பதற்காக சென்றிருந்தேன் அங்குதான் மாய முரசு புத்தகத்தை கண்டேன் பழைய பத்திரிகைகளோடு தேடுவாரற்று கிடந்தது, அதைக்கண்டதும் நான் கையில் எடுத்து புரட்டி புரட்டி பார்க்க ஆரம்பித்தேன் என்னை கவனித்த கடைக்காரர் சொன்னார் "தம்பி உந்த புத்தகம் வேணுமெண்டால் எடுத்துக்கொண்டு போ எனக்கு காசு தரவேண்டாம்" அவர் அப்படி சொன்னவுடனேயே அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு எடுத்துச்சென்று அவசர அவசரமாக வாசித்து முடித்துவிட்டேன்...
சுவரசியமான கதைதான் சிறுவயதில் எனக்கு வியப்பாக இருந்தது ஒரு முரசை வைத்தே மனிரத்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறானே அந்த காட்டுவாசி என்று....
சரி அந்தக் கதையை இனி வாசியுங்கள்......
இப்போது என்னிடமுள்ள இந்த மின்னூல் வடிவம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதே...


DOWNLOAD PDF
மாயமுரசு ,ராணி காமிக்ஸ்


நன்றி!
John Simon C  

3 comments:

  1. Thanks for the pdf. It brings back a lot of good old memories. Jumbu is all-time favorite villain from childhood

    ReplyDelete
  2. thanks friend for the rare rani comics .hope you will post more of rani comics

    ReplyDelete
  3. i see already i post it in my blog. anyway best of luck. visit jsc.johny@blogspot.com

    ReplyDelete