Tuesday, November 1, 2016

Viaggi ok! Tutto compreso!


ALAN FORD in Viaggi ok! Tutto compreso!

இது நான் முதன்முதலாக வாசித்த இத்தாலி மொழி காமிக்ஸ் என்னால் இயன்றவரை மொழிபெயர்த்து கதையாக்கியிருக்கிறேன் கதையில் சுவை இல்லாவிட்டலும் படங்களை பார்த்து இரசிக்கலாம் புரிதலுக்காக இடைக்கிடை படங்களை சேர்த்திருக்கிறேன்.

ஒரு தனிப்பட்ட துப்பறிவு நிறுவனத்தில் பணியாற்றும் Alan ford மற்றும் அவருடைய உதவியாளர் ஜான்  இருவரையும் அழைத்த பாஸ் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்களேன் என இருவருக்குமான விடுமுறைக்கான பயணச்சீட்டை கொடுத்தார் அதில் viaggi ok! Tutto compresso! (பயணம் சரி எல்லாம் உள்ளடங்கலாக) என எழுதப்பட்டிருந்தது அதனைப் பெற்றுக்கொண்ட இருவரும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தபடி கிளம்புகிறார்கள் அத்தோடு அவர்களுக்கு பாஸ் ஒரு கடிதத்தை கொடுத்து இதை நீங்கள் செல்லவேண்டிய இடத்தை அடைந்ததும் பிரித்துப்பார்க்கவும் அதற்கு முன் திறக்கக்கூடாது என அனுப்பிவைக்கிறார் அதை வாங்கியதும் ஒரே ஓட்டமாக பயண ஏற்பாடுகளை ஒழுங்குசெய்ய கிளம்புகிறார்கள்,இவர்கள் விடுமுறையில் செல்வதை சிலர் நம்ப தயாராகவும் இல்லை அவர்களுக்கு வேடிக்கையாகவும் இருந்தது ஏனென்றால் இவர்கள் கஞ்சப்பயல்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு. காலையில் புறப்படபோகின்றோம் என்ற ஆனந்தத்தில் இருவருக்கும் நித்திரையே வரவில்லை ஒருவாறு காலையில் புறப்பட்டு பயணத்தை ஆரம்பிக்கும் இடத்திற்கு சென்றடைகிறார்கள் அங்கே சகல வசதிகளுடனும் கூடிய ஒரு பஸ் நிற்பதை பார்த்து அதன் ஓட்டுனரிடம் சென்று இதுதானா நாங்கள் செல்லவேண்டிய பஸ் என்று கேட்கிறார்கள் அதற்கு பதிலளிக்கும் ஓட்டுனரோ உங்கள் பயணச்சீட்டு என்ன என கேட்கும்போது viaggi ok! Tutto compresso! என இவர்களும் கூற நீங்கள செல்லவேண்டிய வாகனம் இதுவல்ல இந்த இடத்தை விட்டு உடனடியாக போய்விடுங்கள் இது viaggi ok! Tutto compresso!  pagamento extra! (பயணம் சரி எல்லாம் உள்ளடங்கலாக மேலதிகமாக கட்டணம் செலுத்தப்பட்டது) அந்த பயணிகளுக்கு உரியது என்று சாட்டையை எடுத்து விளாச இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகிறார்கள் பின் தாங்கள் செல்லவேண்டிய வாகனத்தை தேடுகிறார்கள் அப்போது அங்கே நின்ற ஒருவரிடம் தங்கள் விபரத்தை கூறி நாங்கள் செல்லவேண்டிய வாகனத்தை கேட்க அவரும் அதை அவர்களுக்கு காட்ட அதிர்ந்து போய்விடுகிறார்கள்.


புரிதலுக்காக அந்த வாகனமும் அவர்கள் பயணிக்கும் விதமும் கீழே படமாக...


அங்கே இவர்களைப்போல இவர்கள் வைத்திருக்கும் பயணச்சீட்டினை கொண்டிருக்கும் பலர் காத்திருந்தார்கள் அதனால் அதில் எப்படி பயணிப்பது? எப்படி என்று அப்பாவித்தனமாக கேட்கிறார் ஜான் அதற்கு ஓட்டுனர் கூறுகிறார் "உங்களுக்கு பிரமிட் வடிவம் தெரியாதா? அதைப்போலதான் கூம்பகமாக எல்லோரும் உடகாரவேண்டும்னென்றதும் வேறு வழியில்லாது ஏறி உட்காருகிறார்கள். அங்கேதான் தங்களை சனியன் பிடிக்கிறது என்பதை அறியாமல் விமான நிலையம் வரைக்கும்தானே என்று சமாளித்து அந்த வாகனத்தில் ஏறி பயணத்தை தொடருகிறார்கள் ஒருவாறு விமான நிலையத்தை சென்றடைந்ததும் அங்கே தரித்து நின்ற ஒரு புதிய விமானத்தை கண்டு அதுதான் தாங்கள் பயணிக்கப்போகும் விமானம் என நினைத்து அதனை நோக்கி ஓடுகிறார்கள் ஆனால் அங்கேயும் தடாதான் ஏனென்றால் அந்த விமானமும் viaggi ok! Tutto compresso!  pagamento extra!  அவர்களுக்கானது “இந்த இடத்தில் நின்றால் சுட்டுவிடுவேன்” விமானி  சொன்னதும் தங்களுடைய விமானத்தை கண்டுபிடித்து அதனை நோக்கி செல்கிறார்கள் அந்த விமானமோ ஒரு பழைய தகர டப்பா காயலாங்கடைக்கு கொடுக்கவேண்டியதை பாவனைக்கு விட்டிருப்பதுபோல தென்பட்டது சரி இதிலாவது நல்ல இருக்கைகள் கிடைக்குமென்று முண்டியடித்து ஏறிவிடுகிறார்கள் ஏறியதும்தான் உள்ளே பார்த்து அடுத்த அதிர்ச்சியை காண்கிறார்கள் விமானத்தின் உள்ளே இருக்கைகள் இல்லை எல்லோரும் பிடித்து நிற்பதற்கு இருபுறமும் கம்பிகள்தான் இருந்தன என்ன செய்ய வேறுவழியே இல்லை அதனை பிடித்துக்கொண்டுதான் பயணம் தொடர்ந்தது அதுவும் விமானம் புறப்படும்போது துள்ளித்துள்ளியே புறப்பட்டு எல்லோருடைய வயிற்றையும் கலக்கிவிட்டது, 


இதற்கிடையில் வயதான அந்த விமானி எல்லோருக்கும் குடைகள் தருகிறார் இதை கண்ட Alan ford (che dobbiamo fare con l'ombrello? Piovra' dentro?) குடையைக்கொண்டு நாங்கள் என்ன செய்ய? விமானத்திற்குள் மழை பெய்யுமா? என நக்கலாக கேட்கிறார் அடுத்துவரப்போகும் விபரீதம் புரியாமல்.
“கொஞ்ச நேரத்தில் நீங்கள் செல்லவேண்டிய இடம் வந்துவிடும் அங்கே விமான நிலையம் இல்லை அதனால் விமானத்தின் கீழ்ப்பகுதி திறக்கப்படும் இந்த குடைகளை பாரசூட்டாக பாவித்து குதித்துவிடுங்கள்” என சாதாரணமாக சொல்லிவிட்டு நகர்கிறார் விமானி, அப்படியே கீழ்த்தளத்தை திறந்தும்விடுகிறார் பாவம் நம்ம ஹீரோவும் அவர் உதவியாளr ஜானும் ஏனைய பயணிகளும் குதிக்கிறார்கள் சிலருடைய குடைகள் பாதிவழியிலேயே சேதமடைந்து கிழிந்துபோக அவர்கள் கீழே விழுந்து மண்டை,கை,கால்கள் உடந்து போகின்றன,







நல்லவேளையாக ஜான் ஒரு குப்பையான குளத்தில் விழுந்து தப்பித்துவிடுகிறார் ஆனால் அலன் போர்டோ ஒரு நீச்சல் குளத்தின் ஓரத்தில் போடப்பட்டிருந்த சாயக்கூடிய இருக்கையின் மேல் விழுந்துவிடுகிறார் அதிலுள்ள ஸ்பிரிங்க் தன்மையால் மேலே எம்பி எம்பி குதிக்கிறார் இதைக்கவனித்த சிறுவன் ஒருவன் அலன்போர்ட் மேலே சென்ற தருணம் பார்த்து அந்த இருக்கையை நகர்த்தி விடுகிறான் அதனால் மேலிருந்து கீழே விழும் அலன் கீழிருந்த ஒரு குழிக்குள் விழுந்து நேரடியாக சலவை அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அழுக்குத்துணிகளுக்குள் விழுந்துவிடுகிறார் அந்த நேரம் அங்கே வந்த பணியாள் ஒருத்தன் அலனை கவனிக்காது அழுக்குத்துணிகளோடு சேர்த்து அலனையும் சலவை இயந்திரத்திற்குள் போட்டுவிடுகிறான் சலவை இயந்திரமும் இயங்க தொடங்க ஒருவாறு உள்ளிருந்து கதவை காலால் உதைத்து திறந்து அலன் வெளியேறுகிறார்





அதே நேரம் அலனை தேடிவரும் ஜான் தம்மோடு விமானத்தில் வந்தவர்கள் இறந்துபோன நிலையில் ஒரு கழுதை வண்டியில் ஒருவர் தள்ளிக்கொண்டுபோவதை பார்த்து கலவரத்துடன் அலனை தேடியலைகிறார். நல்லவேளையாக அவர் அலனை ஒரு ஹொட்டலில் சந்திக்க நேருகிறது தங்கள் பயணச்சீட்டிற்குகு இந்த இடந்தான் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டு இருவரும் அந்த ஹொட்டலில்ற்குள் புக முயல்கிறார்கள் ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுடைய பிரயாணச்சீட்டை வாங்கி பரிசோதிக்கும் பணியாள் அவர்களை விரட்டி இங்கெல்லாம் நீங்கள் தங்கமுடியாது இது viaggi ok! Tutto compresso!  pagamento extra! அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் உங்களுக்கு அதோ அந்த இடமென்று சின்ன சின்ன குடில்களாக இருந்த ஓரிடத்தை காட்ட அவர்களும் அங்கே சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிலுக்குள் நுழைகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடில்களுக்குள் ஒரே குப்பைகளும்,பழைய பொருட்களும் கொட்டப்பட்டு அசிங்கமாக இருந்தது அதுதான் அப்படியென்றால் எங்கே கழிப்பறை என்று தேடினால் ஒரு குகைப்பாதையில் இதற்குள் 3km சென்றால் உங்கள் காலைக்கடன்களை கழிக்கலாம் என எழுதியிருந்தது வெறுப்போடும் கடுப்போடும் தங்கள் குடிலை துப்புரவாக்கினார்கள்.


நேரம் சென்றிருந்தபடியால் பசியெடுத்தது சாப்பிடப்போவோம் என இருவரும் வெளியே கிளம்பி தங்களுக்கு சாப்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தேடினார்கள் ஓரிடத்தில் விதவிதமாக உணவுகள்,பழங்கள் என்பன சாப்பிடுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தன அங்குதான் சாப்பிடவேண்டும் என நினைத்து அருகில் சென்றால் அவர்களுடைய பிரயாணச்சீட்டிற்கு அங்கு சாப்பிடமுடியாதென  இதுவும் viaggi ok! Tutto compresso!  pagamento extra! அவர்களுக்கான இடம் என்று சொல்ல வேறு ஒரு இடத்திற்கு விரட்டப்படுகிறார்கள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடமோ பன்றிகள் தண்ணி குடிக்கும் தொட்டி அதற்குள் ஊற்றப்பட்டிருந்த கேப்பைகூழ்தான் இவர்கள் உணவு அதுவும் கோப்பை கரண்டி எதுவுமில்லாமல் உறிஞ்சித்தான் குடிக்கவேண்டும் இவர்கள் பாத்துக்கொண்டிருக்க சில பன்றிகள் அதை உறிஞ்சிக்குடித்துக்கொண்டிருந்தன



என்ன செய்வதென்று புரியாத நிலையில் அலனுக்கு தனது பாஸ் ஆரம்பத்தில் கொடுத்த கடிதம் நினைவுக்கு வரவே பிரித்துப் பார்க்கிறார் அதிலே ஒரு பெண்ணை தேடிப்பிடிக்குமாறு எழுதப்பட்டிருந்தது பசிவேறு ஒருபக்கம் வாட்ட அந்தப்பெண்ணை தேடி விசாரிக்கலானார்கள் இவர்களை கண்டவுடனேயே ஹொட்டல் முதலாளி துப்பாக்கியெடுத்து “சுட்டுவிடுவேன் இங்கெல்லாம் உங்கள் பிரயாண சீட்டிற்கு வரமுடியாது மரியாதையா ஓடிவிடுங்கள்” என கலைத்துவிடுகிறார்,
பாவம் பசியின் கொடுமையில் என்ன செய்வதென்று அறியாமல் சப்பாத்து பாலிஷ் போடும் கிறீமை எடுத்து இருவரும் தங்கள் உடம்பில் பூசிக்கொண்டு அந்த ஹொட்டலில் பணிபுரியும் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) போல மாறி சமையலறைக்குள் நுழைந்தார்கள் அங்கே சமையல்காரன் ஒருவன் தனது காலை சூப் இருக்கும் பாத்திரத்தில் வைத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான் இவர்களை கண்டதும் கொஞ்சம் சூப் குடியுங்கள் கதகதப்பாக இருக்கும் என்கிறான் அவர்களும் வேண்டாம் எங்களுக்கு சூப் விருப்பமில்லை சாப்பிட வேறெதாவது கிடைக்குமா? எனக்கேட்க “பொறுங்கள் கொஞ்சம் mastriglias இருக்கிறது” என்று சாப்பிட கொடுக்கிறான் கொஞ்சம் சாப்பிட்டவுடன் “இந்த உணவுக்கு என்ன பெயர்? என அலன் கேட்க சமையல்காரனும் “இங்கே இதை mastriglias என்பார்கள் ஆனால் நியூயார்க்கில் கரப்பான்பூச்சி என்பார்கள்” என்றான் இதைக்கேட்டதுமே இருவருக்கும் அருவருப்பாக வாந்திவர சமையலறைக்குள்ளிருந்து தப்பி வெளியே ஓடினார்கள்.





கருப்பு வண்ணம் பூசியிருந்ததால் ஹொட்டல் உணவகத்தில் புகுந்து “நாங்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்த கறுப்பர்கள்” என்று பொய்சொல்லி அங்கிருந்த இறால்,கணவாய்,மீன் வறுவல்களை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் ஓரிடத்தில் மறைவாக இருந்து ஆசை அடங்கும்மட்டும் தின்றுதீர்த்தார்கள்,
இதற்கிடையில் இந்த இரண்டு புதிய திருட்டு கறுப்பர்களையும் தேடிவந்த ஹொட்டல் முதலாளி இவர்களுடைய குடில் கதவை தட்டுகிறான் அவசர அவசரமாக முகத்தை கழுவி கறுப்பு நிறத்தை போகவைத்துவிட்டு கதவைத்திறந்தார்கள் அவர்களை கண்ட முதலாளியும் ஏமாந்து அவ்விடத்தை விட்டகன்றான்.
சாப்பிட்டு முடித்ததும் குளிக்கபோகலாமென கிளம்பினார்கள் அங்கே இரண்டு நீச்சல் தடாகங்கள் இருந்தன ஒன்றில் அழகான பெண்கள் அரைகுறை உடையுடன் நீராடிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டுமிருந்தார்கள் அது viaggi ok! Tutto compresso!  pagamento extra!  அவர்களுக்கானது மற்றையதில் ஒருத்தருமே இல்லை அதுதான் இவர்களுக்கானது அந்த தடாகம் ஒரே குப்பையாகவும் தண்ணீர் அசுத்தமாகவும் பழைய பெட்டிகள்,தகரப்பேணிகளாலும் நிரப்பப்பட்டிருந்தது செத்த எலிகளும் மிதந்துகொண்டிருந்தன ஆனால் அங்கே மட்டுந்தான் இவர்களுடைய பயணச்சீட்டிற்கு அனுமதி இருந்தது வேறு வழியின்றி அதற்குள்ளே இறங்கி குளித்தார்கள்.




விமானத்திலிருந்து குதித்ததாலும் அங்குமிங்கும் அலைந்ததாலும் உடல்வருத்தவே மருத்துவமனைக்கு சென்றார்கள் அங்கும் இரண்டுவகையான மருத்துவமனைகள் இருந்தது அலன் புத்திசாலித்தனமாக முதலாவது மருத்துவமனைக்கு தானும் அடுத்ததிற்கு ஜானையும் அனுப்பிவைத்தான் அலனுக்கு ராஜ உபசாரம் நடந்தது ஆனால் உதவியாள் ஜான் சென்ற இடத்தில் உள்ளே ஒரே நாற்றமடித்தது நர்சோ படுகிழவியாக இருந்தாள் டாக்டரும் பணியாளரும் கடதாசி விளையாடிக்கொண்டிருந்தார்கள் உள்ளே சென்றவர் “எனக்கு கால்வலிப்பதாக கூற “பொறுவாறேன் பழைய வாளை எடுத்துக்கொண்டு உன் காலை வெட்டவேண்டுமென டாக்டர் கூற பயத்தால் உதவியாள் அந்த இடத்தைவிட்டு ஓடித்தப்பினான். வெளியே வந்த அலனும் அலனும்  ஓட்டலுக்குள் புகுந்து உணவுகளை திருடிக்கொண்டு வெளியே ஓடிவருகிறார்கள் அவர்களை துரத்திக்கொண்டு பணியாளர்களும் ஓடிவர ஒருகட்டத்தில் கைக்கெட்டிய தூரத்தில் ஓட்டல் பணியாளர்களும் வந்துவிட “சரணடைகிறோம் சரணடைகிறோம்” என கத்துகிறார்கள்.


ஆனால் அந்த நேரம் எங்கிருந்தோ  துப்பாக்கி குண்டுகள் “டுமீல் டுமீல்” என அவர்களை கடந்து செல்கிறது ஒரே துப்பக்கிச்சத்தம் பாங்ஹ் பாங்ஹ் பயத்தினால் அப்படியே நிலத்தில் விழுந்து படுத்துவிடுகிறார்கள். அப்போதுதான் அலன் கவனிக்கிறார் ஒரு பெண் பீராங்கியால் சுட்டுக்கொண்டிருக்கிறாள்  அவள் யாரென்று அவளையே உற்றுப்பார்க்க அவளே அருகில்வந்து நீர் “அலன்தானே” எனக்கேட்க அலனும் அதிசயமாக “நான்தான் நான்தான் என்னை சுட்டுவிடவேண்டாம்” என கெஞ்சுகிறார் அதற்கு அவளோ “பயம்வேண்டாம் நான்தான் நீங்கள் தேடிவந்த பெண், இங்கு நடக்கின்ற பாகுபாடு வேறுபாடுகளுக்கு எதிராகத்தான் போராடுகிறேன் இனி எல்லோரையும் ஒரேமாதிரித்தான் பார்க்கவேண்டும் இப்படி இரண்டு சாப்பாடு,இரண்டு தங்குமிடம்,இரண்டு மருத்துவமனை எதுவும் இருக்கக்கூடாது எல்லோருக்கும் பொதுவாக எல்லாமே” என்றாள்.அப்போதுதான் அலனுக்கும் பாஸ் விடுமுறை என்ற பேரில் தங்களை ஏன் இங்கு அனுப்பிவைத்தார் என்பதும் அந்தப்பெண் எதற்காக போராடுகிறாள் காரணம் புரிந்தது சரி வந்த விடயம் முடிந்ததே என்று பெருமூச்சு விட்டவாறு அந்த தீவைவிட்டு ஒரு பறக்கும் பரலில் புறப்பட்டார்கள் நல்லவேளைக்கு அதில் வெறும் மூன்றுபேர் மட்டுமே பயணித்தார்கள்..



6 comments:

  1. அட்டகாசம் ! தொடருங்கள்!

    ReplyDelete
  2. நல்ல கதை. இப்படித் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. நல்ல கதை. இப்படித் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete